பிஎஸ்-6 தரத்தில் தரிசனம் தந்த ஜூபிடரின் கிளாசிக் ஸ்கூட்டர்- விலை எவ்வளவு தெரியுமா..?

பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஜூபிடர் ஸ்கூட்டரின் கிளாசிக் வேரியண்ட்டை டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது.


பிஎஸ் 6 டிவிஎஸ் ஜூபிடர்


டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது பிரபல ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலின் கிளாசிக் வேரியன்டை பிஎஸ் 6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எனினும், முந்தைய ஸ்கூட்டர் மாடலில் இருக்கும் ஃப்யூவல்-இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்தில் இயங்கும் அதே எஞ்சின் தான், புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டில் இயங்கும் நாட்டின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை தனதாக்கியுள்ளது டிவிஎஸ் ஜூபிடர் பிஎஸ்-6 ஸ்கூட்டர். இந்த மாடல் கூடுதலாக இண்டி-ப்ளூ என்ற நிறத்தேர்விலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த ஸ்கூட்டர் இசட்.எக்ஸ், பேஸ், கிராண்ட் மற்றும் கிளாசிக் என நான்கு வேரியன்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தற்போது கிளாசிக் வேரியன்ட் மட்டுமே பிஎஸ்-6 எஞ்சின் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்கூட்டரின் மற்ற வேரியன்டுகளும் புதிய எஞ்சின் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாசு உமிழ்வு விதிகளின் படி மேம்படுத்தப்பட்ட இந்த பைக்கிற்கு, முந்தை மாடலை விட கூடுதலாக 15 சதவீதம் எரிபொருள் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.



Popular posts
சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்
Image
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு
Image
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு
Image
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில் செம்பாக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
Image
கோவைமனித உரிமைகள் அரசியல் கட்சியின் இளைஞரணி சார்பில் சரவணம்பட்டி பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
Image