ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் முத்திரை பதித்த சியோமி (xiaomi) நிறுவனம் அடக்கமான வகையில் புதிய மினி மின்சார பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் தயாரித்து வரும் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மலிவான விலையும், பல உயர் ரக தொழில்நுட்பங்களுடன் போன்கள் தயாரிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் சியோமி நிறுவனத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது.
இதை உணர்ந்து கொண்ட சியோமி, ஸ்மார்ட்போன்களை தவிர்த்து பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகிறது. எலெக்ட்ரானிக் உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரானிக் அணிகலன்கள் என சியோமி தயாரிக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் வரவேற்பு இருந்து வருகிறது.
தற்போது அந்நிறுவனம் ஆட்டோத்துறையில் கால்பதித்துள்ளது. நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கேற்றவாறு திட்டங்களை வகுத்து, நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.