முடிசூடா மன்னன் ரோல்ஸ் ராய்ஸ்
சொகுசான ஆடம்பரமான கார்களை தயாரிப்பதில் உலகின் தலைச்சிறந்த நிறுவனமாக விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ், இந்தியாவிலும் தனக்கான வாடிக்கையாளர்கள் வட்டத்தை அதிகளவில் கொண்டுள்ளது.
வட ஐந்தியாவில் மட்டுமில்லாமல் தென்னிந்தியாவிலும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை பயன்படுத்துவோர் அதிகளவில் உள்ளனர்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எப்போது புதிய கார்களை அறிமுகம் செய்தாலும், அதன் மீதான எதிர்பார்ப்பு உலகளவில் இருக்கும். அதேபோல, இந்தியாவின் வாகன ஆர்வலர்களும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அப்டேட்டுகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். புதிய கார்களை அந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தாலும், அதற்கான புக்கிங் இந்தியாவிலும் அதிகரிக்கும். இங்குள்ள பெரிய தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கனவு காராக இருந்து வருகிறது. அதை நினைவாக்குவதில் பலரும் வெற்றி கண்டுள்ளனர்.