தற்காக அந்நிறுவனம் உருவாக்கிய எஸ்யூவி கார் தான் கல்லீனன். 2015ம் ஆண்டு நடந்த ஃபிராங்க்பூர்ட் கண்காட்சியில் பங்கேற்று பேசிய ரோல்ஸ் ராய்ஸின் முதன்மை செயல் அதிகாரி ட்ராஸ்டன் முல்லர்-ஒட்வாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
2018ம் ஆண்டு ரோஸ்ல் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் முழு நீள லக்ஸுரி காரை அறிமுகம் செய்யும் என்றும், அதனுடைய விற்பனை 2019ம் ஆண்டு முதல் தொடங்கும் என அறிவித்தார். அதற்கான தயாரிப்பு பணிகள் முடிந்து, 2015 டிசம்பர் முதல் ரோஸ்ல் ராய்ஸின் முதல் எஸ்யூவி காரின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கடந்த 2018ம் ஆண்டு இந்த காரை அறிமுகம் செய்யப்பட்டது. கல்லீனன் என்ற பெயரில் அறிமுகமான இந்த காரை பார்த்து உலகமே மெய் சிலிர்த்தது. இதுவரை கிடைத்த வைரங்களிலேயே கல்லீனன் என்ற வைரக் கல் தான் மிகவும் பெரியது. மொத்தம் 3100 கேரட் கொண்டது. அதனால் இந்த காருக்கு கல்லீனன் என்று பெயர் சூட்டியது ரோல்ஸ் ராய்ஸ்.