சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் கத்தியை சுழற்றிய 2 இளைஞர்கள் மிரண்டு ஓடிய மக்கள்

" alt="" aria-hidden="true" />


சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் கத்தியை சுழற்றிய 2 இளைஞர்கள் மிரண்டு ஓடிய மக்கள்


பட்டப்பகலில்... ஸ்பென்சர் பிளாசாவில் கத்தியை சுழட்டியபடி மிரட்டி பொதுமக்களை மிரண்டு ஓடவிட்ட 2 இளைஞர்களை போலீசார் புழலில் தூக்கி வைத்துள்ளனர்.


கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள்... அள்ளிட்டு போன போலீசார்


சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.. மக்கள் நடமாட்டம் இந்த வளாகம் மூடப்படும்வரை இருக்கும். ஒவ்வொரு தளங்களிலும் ஏராளமான கடைகள் உள்ளன.


அந்த வகையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் கடைக்குள் நிரம்பி வழிந்தனர்.. அப்போது இளைஞர் ஒருவர் திடீரென கத்தியுடன் உள்ளே நுழைந்தார்.. தலைமுடியை காடு போல வளர்த்து தொங்கவிட்டிருந்தார். அவர் பெயர்தான் ஆண்டனி.. இவரும், நடராஜன் என்பவரும் இங்குள்ள ஷு கடையில் வேலை பார்த்துள்ளனர். ஆண்டனிக்கு வயசு 19, நடராஜனுக்கு வயசு 20!


அதேபோல 2-வது மாடியில் உள்ள கண்ணாடி கடையில் வேலை பார்ப்பவர் கேசவன்.. இவருக்கும் ஆண்டனிக்கும் ஏற்கனவே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.. அப்போது கேசவன் ஆண்டனியை தாக்கி உள்ளார்.. அவரை பழி வாங்குவதற்காகத்தான ஆண்டனி நண்பர் நடராஜனை அழைத்து கொண்டு வந்தார். அங்கிருந்த கேசவனையும் சரமாரியாக தாக்கினார்.


இதை பார்த்து மிரண்ட பொதுமக்கள், அவர்களை தடுத்து நிறுத்தி பிடிக்க முயன்றனர்.. ஆனால், ஆண்டனி டக்கென கையில் கத்தியை எடுத்து காட்டி பொதுமக்களை வெட்ட முயன்றார்.. இதனால் அவர்கள் தலைதெறித்து ஓடினர்.. சிலர் மிரண்டு உறைந்து நின்றனர்.. அவர்களில் ஒருவர் உடனடியாக கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லவும், உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர். பிறகு அங்கிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். நடந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.


இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீசார் கத்தியுடன் சுற்றிய ஆண்டனி, மற்றும் நடராஜனை கைது செய்து புழல் சிறையில்  அடைத்தனர்


Popular posts
சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்
Image
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு
Image
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு
Image
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில் செம்பாக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
Image
கோவைமனித உரிமைகள் அரசியல் கட்சியின் இளைஞரணி சார்பில் சரவணம்பட்டி பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
Image